தமது கடவுச் சீட்டில் போலியான நுழைவு அனுமதியினை பதிவு செய்த மூன்று இலங்கையர்களுக்கு தலா 8 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனை கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து மலேஷியாவில் தொழில் பெறும் நோக்கத்தில், முகவர் ஒருவரின் ஊடாக போலியான நுழைவு அனுமதியுடன் செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் சட்டத்திற்கு அமைய போலியான பயண ஆவணத்தை வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம் அல்லது 10 வருடத்திற்கு மேற்படாத சிறை தண்டனை வழங்க முடியும் தெரிவிக்கப்படுகின்றது.

