Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு எதிரான 20- 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

February 12, 2022
in News, Sports
0
இலங்கைக்கு எதிரான 20- 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Dasun Shanaka and Aaron Finch ahead of the T20I series, SCG, February 10, 2022

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 5  போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதன் முதல் போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

Ben McDermott pulls for six, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

Josh Inglis reverse sweeps on T20I debut, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

அவுஸ்திரேலிய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பென் மக்டிரமென்ட் 53 ஓட்டங்களையும் மார்க்கஸ் ஸ்டெய்னிஸ் 30 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

Wanindu Hasaranga removed Aaron Finch, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

இலங்கை அணிசார்பில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையம் சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த சாதிர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

A pumped up Chamika Karunaratne, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

Binura Fernando was superb at the death, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

இந்நிலையில், 20 ஓவர்களில் 150 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆடிவந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு வெற்றி இலக்காக 143 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

Josh Hazlewood celebrates a wicket, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

எனினும், இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியதால் 19 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை அணியால் பெறமுடிந்த நிலையில் 20 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

Matthew Wade took a well-judged catch, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

இலங்கை அணிசார்பில் அதிகபடியாக, பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Pathum Nissanka guides behind point, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 12 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Adam Zampa again had an impact with the ball, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

இதற்கமைய, அவுஸ்திரேலிய அணி 5 போட்கள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Adam Zampa celebrates one of his three wickets, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

இப்போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் அடம் ஷம்பா தெரிவு செய்யப்பட்டார்.

Josh Hazlewood took 4 for 12, Australia vs Sri Lanka, 1st T20I, Sydney, February 11, 2022

Previous Post

எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது | பிரதமர் மோடி பேச்சு

Next Post

ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் | கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார்?

Next Post
மும்பையை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் | கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures