Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு இப்படி ஒரு சோதனையா..! ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா

January 15, 2017
in News, Sports
0
இலங்கைக்கு இப்படி ஒரு சோதனையா..! ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா

இலங்கைக்கு இப்படி ஒரு சோதனையா..! ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்கள் குவித்தது. அம்லா 134 ஓட்டங்களும், டுமினி 155 ஓட்டங்களும் குவித்தனர்.

இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ஓட்டங்களில் சுருண்டது.

தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ-ஆன் ஆகியது. தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டுபிளிசிஸ் பாலோ-ஆன் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் திணறியது.

அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 42.3 ஓவரிலே இலங்கை 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கருணாரத்னே (50) அரைசதமும், சுரங்க லக்மல் 31 ஓட்டங்களும் குவித்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் வெய்ன் பர்னெல் 4 விக்கெட்டும் ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Previous Post

இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதல்: பொண்டிங் அறிவித்த பலமான அவுஸ்திரேலிய அணி

Next Post

ஐபோன் வடிவில் துப்பாக்கி

Next Post
ஐபோன் வடிவில் துப்பாக்கி

ஐபோன் வடிவில் துப்பாக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures