நடுவண் கலாசாரத் திணைக்களத்தால் கடந்த ஆண்டு பிரதேச மற்றும் மாவட்ட நிலைகளில் நடத்தப்பட்ட கலை இலக்கிய தேசிய நிலைப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தேசிய நிலை விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதிலேயே இருவருக்கும் இரண்டாம் இடத் தைப் பெற்றமைக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பாடலாக்கப் போட்டியில் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வராசா கஜானன், நாட்டார் கலை கற்றல் போட்டியில் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காசிப்பிள்ளை குலசேகரம் ஆகிய இருவருமே வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.