நாட்டின் இறைமையில் கைவைக்காத நாடுகளுடன் நட்புறவு கொண்டு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
உண்மையான நட்புடைய சர்வதேச நாடுகள் இன்னுமொரு நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் செயற்பட மாட்டார்கள்.
நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச நாடுகளுடன் நட்புறவை முன்னெடுத்துச் செல்லுங்கள். அமைச்சின் நிதி மற்றும் அரசாங்க சொத்துக்களை முறைகேடின்றி கவனமாக பயன்படுத்துங்கள்.
எமது நாட்டை சர்வதேசத்தில் சிறந்த நிலைக்கு தரமுயர்த்துவதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுங்கள் என்றும் தேரர் தனது உரையில் கூறியுள்ளார்.

