நாடு ஒரு தீவாக இருந்தாலும் இறக்குமதி செய்யப்படும் தகரத்தில் அடைத்த மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே யின் நுகர்வுக்கு பொருத்தமற்றதும் தரமற்றதுமான ரின்மீன் இறக்குமதி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மஹிந்த சிந்தனை மூலம் அநேக தொழிற்சாலைகள் ரின் மீன் இறக்குமதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் முன்னைய அரசாங்க காலத்தில் இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்களுக்கான கட்டணங்களைக் குறைத்ததன் காரணமாக உள்நாட்டு மீன் சந்தைகள் அழிக்கப்பட்டன.
தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை தாய்லாந்து, சிலி உட்பட 33 நாடுகள் இலங்கைக்கு இறக்குமதி செய்வதாகவும் தரமற்ற தயாரிப்புகள் குறித்த முறைப்பாடுகள் வந்ததும் உடனடியாக நுகர்வோர் விவகார அமைச்சு அதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

