அடுத்த இரு வாரங்களில் சட்ட விரோத மதுபான உற்பத்திகளை ஒழிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்காக வேண்டி விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய இரு தரப்புக்களினதும் ஒத்துழைப்பு இதற்காகவேண்டி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கிராமத்திலிருந்து சட்டவிரோத மதுசாரத்தை இல்லாதொழிப்பது தனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
பொலன்னறுவ திம்புலாகல மகா வித்தியாலயத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

