கைது நடவடிக்கையின் போது எச்சரிக்கையுடனும், சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கைது செய்யப்படுவது தண்டணையின் ஒரு பகுதியாக இல்லாதால் ஒருவரை கைது செய்யும் போது அவரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையிலும் அவரின் சமூக அந்தஸ்து பற்றியும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் கைது நடவடிக்கையின் போது எச்சரிக்கையுடனும், முக்கியமாக சட்டத்திற்கு உட்பட்டும் செயற்படுமாறு ஜனாதிபதி தனது செயலாளர் பேராசிரியர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவரையெனும் கைது செய்யும் போது அவரின் தொழில் தொடர்பில் தீர்மானிப்பது முக்கியம் எனவும் அதேபோல் கடமைகளின் போது சுயாதீனதன்மை. எந்தவித அழுத்தங்களுக்கு அடிப்பணியாது செயற்படுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதநிதிகள் மற்றும் வைத்தியர்கள் போன்றோரை கைது செய்யும் போது அவர்களுக்குரிய கௌரவத்தை செலுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தூர நோக்குடன் உரிய வகையில் கடமைகளை முன்னெடுக்குமாறும் அதேபோல் தேவையான சந்தர்ப்பங்களின் போது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் ஜனாதிபதியின் செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

