11.12.22 – திகதியைக் குறித்துக் கொள்ளுங்கள் நோர்வே நண்பர்களே.
கவிதாவின் 6வது கவிதைத் தொகுப்பு ‘சிகண்டி’.
முதலாவது கட்டுரைத் தொகுப்பு ‘வீட்டு எண் 38/465’.
இவையிரண்டும் யாவரும் பதிப்பக வெளியீடுகள்.
இவ்விரு நூல்களின் அறிமுக நிகழ்வு டிசம்பர் 11ஆம் திகதி ஒஸ்லோ Rommen Scene இல் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் முதற்பகுதியில் நூல்களின் அறிமுகமும் இரண்டாம் பகுதியில்
‘உடல் முழுதும் இறக்கைகளோடு’ அரங்காற்றுகையும் இடம்பெறவுள்ளது.
‘சிகண்டி’ தொகுப்பிலிருந்து கருப்பொருள் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய அரங்காற்றுகை இது.
கவிதைகள், பாடல்கள், இசை, நடனம், ஆற்றுகை இணைந்த கலைப்படைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடனக்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பாடகர்கள், அரங்கப் பொருளாக்கக் கலைஞர்கள் என 30 வரையான கலைஞர்கள் பங்கெடுக்கின்றனர். ஒத்திகைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்