அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் முகமது ப்ஸீக் (62). கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை இவர் வளர்த்து வருகிறார்.
ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்கள், மிக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்து முகமது தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.
மாகாணத்தின் லாஸ் எஞ்சல்ஸ் நகரில் ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத் தந்தையாக இவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
1978-ம் ஆண்டு லிபியாவிலிருந்து கல்லூரி மாணவராக, கலிபோர்னியா வந்த முகமது 1987-ல் டான் என்ற பெண்ணை சந்தித்தார்.
டான் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்த நிலையில் இருவரும் இரண்டாண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் வரை கூட வீட்டில் வைத்து கவனித்து வந்தனர். ஆண்டு முழுவதும் குழந்தைகள் வீட்டில் இருந்துகொண்டே இருப்பார்கள்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் டான் இறந்தார். ஆனாலும் தனியாளாக முகமது குழந்தைகளை பராமரித்து வருகிறார்.
முகமது கூறுகையில், நாங்கள் வளர்த்த குழந்தைகளில் ஒன்றை 1991-ம் ஆண்டு இழந்தோம்.
அந்த துயரத்தை எங்களால் தாங்க முடியவில்லை. இனி வாழ்நாள் முழுவதும் நோயுற்ற குழந்தைகளுக்காகவே வாழ நானும், டானும் முடிவெடுத்தோம்.
1997-ம் ஆண்டு எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு பிறக்கும் போதே எலும்பு இருந்த நிலையில், மற்ற குழந்தைகளைப் போலவே அவனையும் கவனித்துக்கொண்டோம்.
மனைவி இறந்த பிறகு தனியாளாக குழந்தைகளைக் கவனித்து வருகிறேன். பெயர் கூட இல்லாமல் தான் குழந்தைகள் என்னிடம் வருகிறார்கள்.
அவர்களுக்கு அழகான பெயர்களை வைத்து தான் அழைப்பேன். 40 குழந்தைகளின் பெயர்களும் அவர்களைப் பற்றிய தகவல்களும் எனக்கு அத்துப்படியாக உள்ளது என கூறியுள்ளார்.