அயோத்தி இராமர் கோவில் குறித்து இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது என பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாட் ஹுசைன் விமர்சனம் செய்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்ட இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை வழங்குகிறோம் என இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

