Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இராணுவ மயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம்: எரிக் சொல்ஹெய்மின் கருத்தை எதிர்க்கும் அம்பிகா

May 3, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கார்த்திகைத் தீபத்திருநாளில் தீபம் ஏற்றுபவர்களை விசாரிப்பது தான்  நல்லிணக்கமா? |  அம்பிகா

இலங்கையின் வட மாகாணம் கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் (ambika satkunanathan) தெரிவித்துள்ளார்.

வடபகுதி அமைதியாக உள்ளது எனவும் அங்கு பாதுகாப்பு சிறப்பாக உள்ளது எனவும் சிறிலங்கா அதிபரின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim) தனது எக்ஸ்(x) தளத்தில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தான் பல தடவைகள்  இலங்கைக்கு பயணம் செய்திருந்தாலும், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக சிறிலங்கா அதிபரின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இராணுவ மயம்

அத்துடன், இலங்கையின் வடபகுதி தற்போது அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதென அவர் குறிப்பிட்டிருந்தார்.

இராணுவ மயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம்: எரிக் சொல்ஹெய்மின் கருத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர் | Sl North Militarized Erik Solheim Visit Twitter

எரிக் சொல்ஹெய்மின் இந்த கருத்துக்கு சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் பாதுகாப்பு தரப்பினர், குடிசார் சமூகத்தினரையும் மாற்றுக் கருத்துடையவர்களையும் ஊடகங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பின்மை

இந்த தரப்பினர் அச்சுறுத்தப்பட்டு தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ மயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம்: எரிக் சொல்ஹெய்மின் கருத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர் | Sl North Militarized Erik Solheim Visit Twitter

மேலும், பொது மக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தனது முகாம்களை விஸ்தரிக்க முயல்வதாகவும் இந்து வழிபாட்டு தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருளியல் திணைக்களமும் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் வட மாகாணத்தில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதோடு, அமைதிக்கு எதிரான சூழலை உருவாக்குவதாகவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த எரிக் சொல்ஹெம்

“Northern Sri Lanka is at peace and that is wonderful. Security is good” says @ErikSolheim.

Northern SL is heavily militarized. Security agencies surveil, harass and intimidate civil society, dissenters and media, causing anxiety and stress to these groups. https://t.co/jDXQWMp75s

— Ambika Satkunanathan (@ambikasat) May 1, 2024
Previous Post

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Next Post

ஊழி திரைப்படத்திற்கு இலங்கை அரசின் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருக்கிறோம் | தீபச்செல்வன்

Next Post
ஊழி திரைப்படத்திற்கு இலங்கை அரசின் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருக்கிறோம் | தீபச்செல்வன்

ஊழி திரைப்படத்திற்கு இலங்கை அரசின் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருக்கிறோம் | தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures