பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார விளம்பரத்திற்காக கடமையில் இருக்கும் இராணுவத் தளபதியின் படத்தையும் கருத்துக்களையும் பயன்படுத்துவது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது என ஐ.தே.க முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் நடவடிக்கை பிரிவு பிரதானியுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவில் இன்று(14) முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எழுத்து மூலம் முறையிட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வொக்ஸல் வீதியில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

