Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்தின் உதவியுடன் கப்பத்துக்காக கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞன்

November 13, 2018
in News, Politics, World
0
இராணுவத்தின் உதவியுடன் கப்பத்துக்காக கடத்தப்பட்ட கிளிநொச்சி இளைஞன்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவரின் உதவியுடன் கிளிநொச்சி பொன்னகர் இளைஞன் கடத்தப்பட்டு பொலனறுவைக்கு கொண்டு செல்லப்பட்டு ஜந்து இலட்சம் ரூபா கப்பமும் கோரப்பட்டு உறவினர்களால் வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருதாவது, கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீபாவளி தினத்தன்று அறிவியல் நகர் பல்லைக்கழக சந்தியிலுள்ள உணவகத்திற்கு சென்று வருவதாகத்தெரிவித்து அவரது உறவினர் அழைத்துச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் வாகனம் ஒன்றில் பொலனறுவையைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டு இளைஞரின் உறவினர்களிடம் ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கினால் அவரை உயிருடன் விடுவதாக கடத்தல்காரர்கள் தொலைபேசியூடாக அச்சுறுத்தினர். இதையடுத்து உறவினர்களால் ஐந்து இலட்சம் ரூபா பணம் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணகைளை முன்னெடுத்த கிளிநொச்சி காவல் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸார் மேறகொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலனறுவையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதுடன் கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது.இவ்வாறு கைது செய்யபபட்ட இரண்டு சந்தேக நபர்களையும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திரு.ம.கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த இரண்டு பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்..

இதேவேளை இந்த இளைஞரை கடத்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இருந்த சந்தேகத்தில்; முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவரை இன்று கிளிநொச்சிக் காவற்துறையினர் கைது செய்து இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சிப்பாயை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

இலங்கை வரலாற்றில் இது உன்னதமான வெற்றி : எம் .ஏ.சுமந்திரன்

Next Post

மட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

Next Post

மட்டக்களப்பு – சாலம்பச்சேனை ஆற்றங்கரையில் 4 யானைகளின் உடல்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures