புதிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக பலர் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.
பதவிப்பிரமாண நிகழ்வின் பின்னர் அனைத்து கெபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சரவையின் 18 அமைச்சுக்கள் மறுசீரமைக்கப்பட்டதுடன் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.