உயிரிழந்த தமிழக மீனவரின் சடலத்தை இறுதிச் சடங்குகளுக்காக இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மீனவர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டது.
இலங்கைக் கடற்படையின் படகு மோதியே குறித்த மீனவர் உயிரிழந்தார் என்று சக இந்திய மீனவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த மீனவரின் சடலத்தைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துமோ நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்று அவர்கள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

