இரவு நேரத்தில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே, இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக, ஹட்டன் ஊடாக அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண்பதற்காக, மாலை நேரத்தில் சிவனொளிபாத மலைநோக்கிச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சீரற்ற காலநிலை நிலவும் இந்நாட்களில் இரவு வேளையில் சீவனொளிபாத மலைக்குச் செல்வது ஆபத்தானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மலைக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் அறிவித்துவிட்டு, காலை நேரங்களில மலை ஏறுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாலைக்குள் மலையிலிருந்து கீழிறங்கிவிட வேண்டுமென்றும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில், அம்பகமுவ பிரதேச சபை, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள், நல்லதண்ணி ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
