கனடா நாட்டிலுள்ள ரொறோன்ரோ மாநகரில் வானொலி துறையில் புகழ்பெற்ற ஆர் ஜே சாய் ‘ பிரெய்ன் ‘ – ‘ஷாம் தூம் ‘எனும் பெயரில் இரண்டு திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
‘தாதா 87’, ‘பவுடர்’, ‘ ஹரா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும் ‘ பிரெய்ன்’ எனும் திரைப்படத்தையும், அறிமுக இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஷாம் தூம்’ எனும் திரைப்படத்தையும், ஆர் ஜே சாய் இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் ஜே சாய் தயாரிக்கிறார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.