இரண்டு ஓட்டங்களினால் பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டு ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது.

 

2021 ஐ.பி.எல். தொடரின் 32 ஆவது லீக் போட்டி நேற்றிரவு டுபாயில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ராஜஸ்தான் அணியை பணித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் வீரர்களின் தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தினால் 20 ஓவர்கள் நிறைவில் 185 ஓட்டங்களை குவித்தது அந்த அணி.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய எவின் லூயிஸ் 21 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களை பெற்றனர்.

அது மாத்திரமன்றி மத்தியதர துடுப்பாட்ட வீரர்களான லியாம் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் 25 ஓட்டங்களையும், மஹிபால் லோமோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, முஸ்தாபிசூர் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் போரல் மற்றும் ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியும் அதிரடியான ஆட்டத்தினால் பதிலடி கொடுத்தது.

எனினும் அவர்களால் 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 183 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இதனால் பஞ்சாப் கிங்ஸ் வெறும் இரண்டு ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.

அணி சார்பில் அதிகபடியாக ராகுல் 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களையும், அடன் மார்க்ரம் 26 ஓட்டங்களையும் மற்றும் நிகோலஷ் பூரண் 32 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

Photo Credit ; ‍IPL


http://Facebook page / easy 24 news

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *