அடுத்த சாட்டை படத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இடம் பெற்றுள்ள, ‘கரிகாடு தானே பேரழகு…’ ‘அவன் வருவான் என இருந்தேன்.
ஆகிய பாடல்களைப் பாடி, திரையுலகில் அறிமுகமாகியுள்ள சத்யன் இளங்கோ, தற்போது பல படங்களில் பாடி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”இலங்கையை பூர்வீகமாக கொண்ட எங்கள் குடும்பம், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறது. ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் திரைப்படமான, இனியவளே காத்திருப்பேன் என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். பாடகராகவும், நடிகராகவும் தொடர விரும்புகிறேன்,” என்றார்.

