கடந்த அரசாங்க காலத்தில் செலுத்துமாறு பணிக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாவுக்கு அதிகமான மாதாந்த வருமானம் பெறுபவர்களது வரி, எதிர்வரும் ஜனவரி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
ஜனவரி முதல் இரண்டரை லட்சம் ரூபாவுக்கு அதிகம் மாதாந்த வருமானம் பெறும் ஒருவரே வரி செலுத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

