புரைக்கேறிய இரண்டரை வயதுப் பாலகன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்று நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் நடந்துள்ளது.
நியூமன் கணிதன் என்ற இரண்டரை வயதுப் பாலகனே உயிரிழந்துள்ளான்.
நேற்றுமுன்தினம் கணிதன் ஜஸ்கிறீம் அருந்திவிட்டு புரியாணி உண்டுள்ளான். அப்போது புரையேறியுள்ளது. உடனடியாக அவனை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.அங்கிருந்து கணிதன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். எனினும் நேற்றுக் காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கோவன் மூலம் விசாரணைகள் நடத்தி அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

