‘டிஷ்யூம்’ படத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டில் விஜய் அண்டனியை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர் இயக்குநர் சசி. 2016 ஆம் ஆண்டில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் விஜய் அண்டனியை கொமர்சல் ஹீரோவாக உயர்த்தியவர் இயக்குநர் சசி. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் இணைந்திருக்கிறது . இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் தயாரிப்பாளர் ரமேஷ் பி. பிள்ளை தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விஜய் அண்டனி , அஜய் திஷான், சுவாசிகா ஆகியோர் நடிக்கிறார்கள். தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில் தமிழகத்தின் வடப்பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் அண்டனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியை வழங்குகிறது. ” என்றார்.