பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வற்கு பொலிஸார் முயன்ற நிலையில், இம்ரான் கானின் பிரிஐ கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபட்டனர.
நீதிபதி ஒருவரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இம்ரான் கானை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதனால், இம்ரான் கானை கைது செய்வதற்கு லாகூரிலுள்ள இம்ரான் கானின் வீட்டுக்கு பொலிஸார் சென்றனர்.
அப்போது, அங்கு திரண்டிருந்த பிரிஐ கட்சி ஆதரவாளர்கள் பொலிஸாருடன் நேற்றிரவு மோதல்களில் ஈடுபட்டனர்.
AFP Photo
பொல்லுகளை ஏந்தியிருந்த இம்ரானின் ஆதரவாளர்கள் போத்தல்கள், கற்களை வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தினர்.
இன்று புதன்கிழமையும் இம்ரான் கானின் வீட்டைச் சூழ ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
இன்று அதிகாலை வீடியோவொன்றை வெளியிட்டுள்ள இம்ரான் கான், ‘இன்று அவர்கள் தயாராகுகிறர்கள். மீண்டும் வரப்போகிறார்கள். எமது மக்களுக்கு எதிராக அவர்கள் கண்ணீர்ப்புகை பிரயோகம் போன்றவற்றை மேற்கொள்வார்கள். ஆனால், அதை அவர்கள் நியாயப்படுத்த முடியாது என்பதை அறிய வேண்டும்எனக் கூறியுள்ளார்.