இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.
நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நாட்டை காலனித்துவ வாதிகளிடமிருந்து மீட்பதற்கு சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் இணைந்தே பாடுபட்டனர்.
இந்த நாட்டிலுள்ள சகலரும் மீண்டும் இந்த நாட்டைப் பிரித்துவிடாமல், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

