ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடன் நேற்று (18.10.2022) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் ஒருபோதும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு மாறாக ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
பொருளாதார சூழ்நிலை
இந்நிலையில் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது.
ஜெனிவா தீர்மானம்
அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை முன்வைக்கவேண்டும்.
அத்தோடு, ஜெனிவா தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இச்சந்திப்பை தொடர்ந்து ஆளும்கட்சிகளில் ஒன்றான பசுமைக் கட்சியின் கொள்கைவகுப்பாளருடனும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, ஈழத்தமிழர்கள் சார்ந்து சில நிலைப்பாடுகளை உணரமுடிந்தது என்பதையும், அத்தோடு அவர்களுடன் ஒரு தொடர்ச்சியான தகவல்பரிமா
ற்றத்தை முன்னெடுக்கவும் அவர்களுடனான தொடர்பை பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி ப.அஞ்சனா மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களும் கலந்துக் கொண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.