இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வு சட்டவிரோதமானது என, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சபாநாயகர் கரு ஜயசூரியவினால் தெரிவுசெய்யப்பட்ட சில கட்சித் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டமும் சட்டவிரோதமானது என சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
இந்நிலையில், இவ்வாறான அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாட்டில் ஆளுங்கட்சி கலந்துக் கொள்ளாது என்பதை நாம் உரியவர்களுக்கு அறிவித்துள்ளோம்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டுதல், நாடாளுமன்ற நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல், நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துதல் என்பன தன்னிச்சையான செயற்பாடுகளாக மாறியுள்ளன. இதன் விளைவாக நாடாளுமன்றத்தின் மரியாதையும், சட்டபூர்வ தன்மையும் வீழ்ச்சியடையும்” எனத் தெரிவித்தார்.