ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
சின்னத்தை மாற்றப் போவதில்லையென்றால், கூட்டணி அமைப்பது சாத்தியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குருணாகலையில் நடைபெற்ற கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இக்கட்சியின் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவேறு கருத்துக் கொண்டவர்கள் காணப்படுகின்றனர். இன்றைய தீர்மானத்தின் பின்னர் பலர் அரசியல் ரீதியில் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு செல்ல இடமிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

