பிரதி வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (23) நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் ஈடுபட்டுள்ளதனால் இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.