கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (28) 6 மணிநேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 03, 04, 05, 07 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படும் எனவும் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதியுயர் மின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலைகளே இந்த தடைக்குக் காரணம் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.
நேற்று இடம்பெறவிருந்த இந்த மின்வெட்டையை இன்று வரை ஒத்திவைப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

