தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் இன்று 731 ஆவது நாளில் அடையாள உண்ணாவிரத்துடன், கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் வடமாகாண முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், பிரதேசசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.