உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையின் தற்போதை நிலைவரம் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இதன்போது கவனஞ்செலுத்தப்படவுள்ளது.
அத்தோடு, புதுடில்லியில் இன்று ஆரம்பமாகும் அனைத்துலக சூரியசக்தி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரி, அதில் சிறப்புரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட 45 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.