ஓராயிரம் இளம் வீரரை ஒன்றாய் விதைத்த பெரும் மயானத்தில் கைக்குழந்தை முதல் குமரி வரை சலனம் இன்றி நடு நிசி தாண்டியும் கைகளில் விளக்கோடும் கண்களில் நீரோடும் நின்று மனம் நெகிழ்ந்த பொழுதுகள் மின்னலென வெட்டிப்போகிறது மனதில்.அந்த வேளைக்காக வடக்கின் துயிளிமிள்ளங்கள் அனைத்தும் இன்று தயாராகி இருக்கின்றது .
சொந்தங்களின் சோகங்கள் காதில் ஒலித்து ஓய்வதற்க்குள் நெகிழும் மணியோசையோடு தூறல் மழை நனைக்க விழிகள் பெருக்கெடுக்க “எங்கே எங்கே ஒருதரம் விழிகளை…..” காதில் நுழைந்து மனதைக்குடைந்து மனமலை வெடித்து சிதறும்.
அந்த பொழுதுக்காக மக்கள் இப்போதே ஆயத்தமாகிவிட்டனர் ,
குமுறும் உறவுகளின் குரல் உச்சஸ்தாயிதொட்டு குரல் நாண் தழுதழுத்து தீபம் அணையாமல் கையணைத்து, மறு கல்லறையின் உற்ற உறவுகள் கிட்ட இல்லாவிட்டால் அங்கும் ஓடிச்சென்று ஒத்ததருணத்தில் அவ்விளக்கும் ஏற்றி கல்லறை தொட்டணைத்து கண்ணீர் பெருக்கெடுக்க மாவீரர்களை நினைவு கூற தமிழர் தாயகம் தயார் நிலையில் இருக்கிறது .
பலவகையான கெடுபிடிகள் தூண்டிவிடப்பட்டுள்ள நிலையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன .