இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை இன்று மாலை அவசரமாக சந்தித்து பேசவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆலோசனை செய்ய, தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை இன்று கூடவுள்ளது.
சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பு அரசியலில் பெரும் தாக்கம் செலுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
