நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(28) மற்றும் நாளைய (29) தினங்களில் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ய கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

