Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

July 31, 2018
in News, Politics, World
0

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு இன்று  நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனி நபரே அல்லது நிறுவனமே இந்த தடை உத்தரவை கருத்திற்கொள்ளாது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Previous Post

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்கு

Next Post

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வந்த சோகம்

Next Post

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வந்த சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures