நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(01) நாளையும்(02) மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடமேல், மேல், வடமத்திய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழையுடன் கடும் காற்று வீசக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.