நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பல பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா.வின் அமைதிப்படை இந்நாட்டுக்குள் வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யு.என். என பதிக்கப்பட்டுள்ள இராணுவ ட்ரக் வாகன தொடர், வீதியில் பயணிப்பதை புகைப்படம் எடுத்து சிலர், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.