ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்னும் நான்கு தினங்களில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பணிகள் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ஒரு கோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 26 அங்குல நீளத்தில் அச்சிடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

