Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‛இனி நான் பாடப் போவதில்லை!

September 3, 2017
in Cinema
0

காசு… பணம்… துட்டு… மணி.. மணி… என்ற பாடல் வரிகளை முணுமுணுக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். சூது கவ்வும் படத்தில் அனைவரையும் கவர்ந்த அந்த கானா பாடலைப் பாடியும் ஆடியும் அசத்தியவர், கானா பாலா. மரபு கவிதைகளில் இருந்து விலகி, எதையும், எப்படியும் எழுதலாம் என்ற ஹைகூ கவிதை போல, இலக்கண இம்சைகளின்றி, சாமானியர்களின் அடித்தள விஷயங்களை கருவாக கொண்டு பிறப்பவை இந்த கானா வகைப் பாடல்கள். இதில் விற்பன்னர் இவர். சென்னையின் மொழி அடையாளங்களில் கானாவும் ஒன்றென்றால், கானா காட்டும் கலைஞர்களில் இவர் இன்றைய அடையாளம். திண்டுக்கலுக்கு இசை நிகழ்ச்சிக்கு வந்தவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தார். இதோ:

முகவரி ?

பிறந்து வளர்ந்தது சென்னை. பாலமுருகன், 47. என்ற பெயர் சினிமாவிற்கு கானா பாலாவாக மாறியது. எம்.எஸ்சி., பி.எல்., படித்துள்ளேன். மனைவி நதியா, மகள் அபிமன்யா, மகன் அபிமன்யூ.

திரையுலகம் எப்படி?

2007ல் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தாலும் 2012ல் பாடிய பாடல்கள் தான் பிரபலமானது. இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டக் கத்தி படத்தில், ஆடி போனா ஆவணி மற்றும் நடுக்கடலில் கப்பல இறங்கி என்ற பாடல்கள் பிரபலமானது.

ஏன், கானா மட்டுமே?

இது சென்னை மொழிக்கான பாடல். இதனை ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனால் பல பாடல்களை நானே எழுதி, டியூன், கம்போசிங் செய்து பாடுகிறேன். சிலவற்றில் இசை கலைஞர்களின் டியூனுக்கு நான் பாடியுள்ளேன்.

இது வரை பாடியது

நான்கு ஆண்டில் 500 பாடல்கள். பெரிய, சிறிய நடிகர் என நடிகர்களுக்கு ஏற்ப பாடுவதில்லை. இசைக்கு ஏற்ப பாடுகிறேன். வழக்கறிஞர் தொழிலில் கிடைக்காத புகழ், நிம்மதி சினிமாவில் கிடைத்துள்ளது. தேவையான அளவு சம்பாதித்து விட்டேன்.

இலக்கு?

அடுத்தாண்டு ஜூன் 20, எனது பிறந்த நாள். அதோடு சினிமாவில் பாடுவதை நிறுத்த உள்ளேன். அதற்குள் அட்வான்ஸ் வாங்கிய படங்களுக்கான பாடல்களை முடித்து கொடுத்து விடுவேன்.

ஏன் இந்த திடீர் முடிவு?

சினிமா என்ற ரயிலில் பயணிக்கிறேன். எனது ஸ்டாப் வரும் போது இறங்கி கொள்வது போல் சினிமாவிலும் விடைபெற உள்ளேன். அடுத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமல்லவா? அடுத்து வருவோர் என்னை விட நன்றாக பாட வேண்டும்.

எதிர்காலத்தில்?

சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடுவேன். இசை நிகழ்ச்சிகள் நடத்துவேன்.

Previous Post

ஆற்றல் உள்ளவர்கள் சொல்லுங்க கேட்டுக்குறேன்

Next Post

குர்திஸ்தானில் இலங்கைக்கான தூதரகம் அமைப்பு

Next Post

குர்திஸ்தானில் இலங்கைக்கான தூதரகம் அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

வட மாகாண டென்னிஸ் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் ; யாழ் ஃபிளமிங்கோஸ் அணி அறிமுக விழா !

August 24, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன்

August 24, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் அவதி: சஜித் பிரேமதாச

August 24, 2026
காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

காணாமல்போன 31 பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம் – காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்

August 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures