நாட்டிலுள்ள சட்டங்கள் இனவாதத்தை தூண்டும் விதத்தில் தான் காணப்படுகின்றன. இந்த சட்டத்துக்குள் இருந்து கொண்டுதான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றனர் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அஸ்கிரிய பீட மகாநாயக்கரிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது மகாநாயக்கரிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
இன்று முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் கட்சி உள்ளது. தமிழ் மக்களுக்கு தமிழ் கட்சி உள்ளது. அவரவர்கள் அவர்களது இனத்துக்கே வாக்களிக்கின்றனர். சிங்கள பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வாக்குக் கேட்டாள் அவருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தல் முறைமைக்குள் நல்லிணக்கம் என்பது எங்கே என்று கேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.