தனது முகநூல் பக்கத்தில் இனவாத கருத்துக்களை பதிவு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.