இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை நிலையம் ஒன்று மொனராகலை நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது
இந்த கிளையுடன் நாட்டில் ஒசுகல கிளைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மாத்தளை, பேராதனை, தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும் இவ்வாறான விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
இந்த வருட இறுதிக்குள் ஒசுசல விற்பனைக் கிளைகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரிக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

