உலகம் பூராகவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், ஒரேநேரத்தில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இந்தோனேஷியாவில் நடைபெற்றுள்ளது.
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகத்திராவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
450க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ஒரேநேரத்தில் திருமணம் செய்துவைக்கப்பட்டு, திருமணப்பதிவுச் சான்றிதழ்களையும் அரசாங்க அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
திருமண ஜோடிகளில் பலர், ஒரே வண்ணமயமானதும் பாரம்பரியதுமான ஆடைகளை அணிந்திருந்தனர்.
புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், இந்தோனேஷியாவில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரேநேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்ததாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.