இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்தனர்.
இந்த தீவுகளை சுற்றி 14 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாலி அருகே லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

