இந்தோனேஷியாவின் சுலவேசி பகுதியில் இருந்து சேலையார் பகுதி நோக்கி, ‘கே.எம்.லேஷ்டரி’ என்ற பயணிகள் கப்பல் ேநற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.
அதில், 140 பயணிகள் இருந்தனர். சுலவேசி பகுதி அருகே கப்பல் சென்றபோது திடீரென பயங்கர சூறாவளி வீசியது. இதனால், கப்பல் திடீரென கடலில் மூழ்க தொடங்கியது.
இதில் 29 பயணிகள் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர். 70 பேர் மீட்கப்பட்டனர். மேலும், 41 பேரை காணவில்லை. இந்த விபத்தில் 70 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

