இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் 5.9 ரிக்டர் அளவில் நேற்றிரவு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து யு.எஸ்.ஜி.எஸ் உடன் இணைக்கப்பட்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா இருப்பதனால் தொடர்ச்சியாக நிலநடுக்கத்தாலும், எரிமலை வெடிப்புகளாலும் பாதிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.