பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதாகவும், அவற்றை விரைவில் அரசு வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்., எல்லையில் உள்ள பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் பயங்கரவாதிகள் முகாம் மீது பிப்.,26 அன்று இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை பாலாகோட் மீது தாக்குதல் நடத்தியதற்கு என்ன ஆதாரம் உள்ளது என மேற்குவங்க முதல்வர் மம்தா கேட்டிருந்தார். இதே போன்று சிலர், பாலாகோட் பாக்., எல்லைக்குள் இல்லை எனவும், அது இந்திய எல்லைக்குள் தான் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் சில கூறி வருகின்றன.
இதனையடுத்து பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதாரங்கள் உள்ளது. செயற்கைக்கோள் படங்கள் உள்ளது. அவற்றில் பயங்கரவாத முகாம் கட்டிடடங்களை சுற்றி 150 முதல் 200 மீட்டர் தொலைவிற்கு குண்டுகள் வீசப்பட்டது தெளிவாக உள்ளது. தாக்குதலுக்கு முன்பும், பின்பும் உள்ள செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. அதனை வெளியிட வேண்டுமா, வேண்டாமா என்பது அரசின் விருப்பம். தாக்குதலில் சேதமடைந்த பகுதியை சரி செய்யும் முயற்சியில் பாக்.கும் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.