இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர், மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதில் 11 பேர் நெடுந்தீவு கடற்பரப்பிலும், 5 பேர் காங்கேசன் துறை கடற்பரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் நீரியல்வள திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]