Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

September 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

இலங்கை காவல்துறையின் 84ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு வருகைதந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பாணியில் ஹரிணி அமரசூரியவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை காவல்துறையின் 84ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டித் தொடரின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (14) பம்பலப்பிட்டி காவல்துறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி நிகழ்வுக்கு காவல்துறை மா அதிபர், பாதுகாப்பு பிரதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு | Pm Harini Is Protected Like Indian Prime Minister

பாதுகாப்பு உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில் பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தமைக்கான காரணம் அவருக்குள்ள கொலை மிரட்டலா என்று தெரியவில்லை.

இந்திய பிரமருக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் சாயலில் கறுப்பு மூக்கு கண்ணாடிகள் அணிந்த கோட்- சூட்- டை அணிந்த ஆறுக்கு மேற்பட்டவர்கள் அவரின் இரு பக்கமும் அவரை மறைத்தவாறும் வந்தனர். அதில் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியும் கோட் அணிந்திருந்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடு

குண்டு துளைக்காத BMW காரில் பம்பலப்பிட்டி காவல்துறை மைதானத்தில் வந்திறங்கிய பிரதமர் ஹரிணி நடந்து மேடைக்கு செல்லும் வழியில் புகைப்படம் எடுக்க முற்பட்ட ஒரு புகைப்படப்பிடிப்பாளரை மறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரியை அவதானிக்க கூடியதாகவும் இருந்தது.

இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு | Pm Harini Is Protected Like Indian Prime Minister

இந்த நிலையில் எந்த பாதுகாப்பும் தேவையில்லை, அவற்றுக்கு பெரும் நிதி விரயமாக்கப்படுவதாக கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

Previous Post

அறிமுக நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சரீரம் ‘

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures